இந்தோனேஷியாவின் ஜாவா தீவுகளில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.0 ஆகப் பதிவாகியுள்ளது.
துபானிலிருந்து 96 கி.மீ தொலைவில் கடலுக்கடியில் 594 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உருவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்திய நேரப்படி பிற்பகல் 3.35 மணிக்கு உருவான இந்த நிலநடுக்கம் கடற்கரை நகரங்களான துபான், சுரபயா , டென்பாஸர் மற்றும் செமரங் ஆகிய பகுதிகளில் உணரப்பட்டது.
இந்த நிலநடுக்கத்தால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என இந்தோனேஷிய பேரிடர் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.