ஜம்மு காஷ்மீரின் உதம்பூரில், பைசாகி கொண்டாட்டத்தின் போது இரும்பு நடை பாலம் உடைந்து விபத்துக்குள்ளானதில் குழந்தைகள் உட்பட சுமார் 80 பேர் காயமடைந்தனர்.
சீக்கியர்களின் புத்தாண்டு பிறப்பையொட்டி நடைபெற்ற பைசாகி கொண்டாட்டத்தின் போது, செனானி பகுதியின் பெயின் கிராமத்தில் உள்ள நடை பாலத்தில் அதிகமானோர் கூடியதால், அப்பாலம் திடீரென உடைந்து விழுந்தது.
இதில் குழந்தைகள் உட்பட 80 பேர் காயமடைந்த நிலையில், சுமார் 20 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.