மத்திய மாநில அரசுத் துறைகள் சார்ந்த 12 ஆயிரம் இணையதளங்கள் மீது சைபர் தாக்குதல் நடைபெறக்கூடும் என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்தோனேசியாவைச் சேர்ந்த ஒரு ஹேக்கர் குழு ஆயிரக்கணக்கான அரசு இணையதளங்களைக் குறிவைத்து இருப்பதாக இந்திய சைபர் குற்றப்பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளஇந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்து மாநில அரசுகளும் யூனியன் பிரதேசங்களும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.