பிபிசி தொலைக்காட்சிக்கு எதிராக அன்னிய செலாவணி சட்ட விதிகளை மீறியதாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
மும்பை மற்றும் டெல்லியில் உள்ள பிபிசி தொலைக்காட்சி அலுவலகங்களில் கடந்த பிப்ரவரி மாதம் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. இதையடுத்து பிபிசி அலுவலகத்துக்கு கடந்த மாதம் அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியதோடு, சில ஊழியர்களிடம் விசாரணை நடத்தியது.
இந்நிலையில், பிபிசி தொலைக்காட்சிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்து அமலாக்கத்துறை விசாரணையை தொடங்கியுள்ளது.