அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில் உள்ள மறுசுழற்சி ஆலையில் பயங்கர தீ விபத்து நேரிட்டத்தால், அப்பகுதியில் வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.
ரிச்மண்டில் உள்ள தொழிற்சாலையில் புதன்கிழமையன்று திடீர் தீ விபத்து ஏற்பட்டதில், ஆலை முழுவதும் தீ பரவி வானுயர கரும்புகை எழுந்தது.
தீயைக் கட்டுப்படுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்ட நிலையில், புகையின் நச்சுத்தன்மை காரணமாக உள்ளூர் மக்கள் வெளியேற உத்தரவிடப்பட்டது. மேலும், ஆலையை சுற்றியுள்ள நதிகளில் நீர் மாசுபட்டுள்ளதா? என்பதை கண்டறிய நீரின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளது.