அழிந்து வரும் இனமான லாகர்ஹெட் ஆமைக்குட்டிகளை ஆஸ்திரேலிய வனவிலங்கு அதிகாரிகள் மற்றும் வனவிலங்குகள் மீட்பு ஆர்வலர்கள் பெரும் முயற்சிக்குப் பின் சிட்னி கடற்பகுதியில் விட்டனர்.
கடந்த மார்ச் 29ம் தேதி ஷெல்லி கடற்கரையில் இருந்து 130 ஆமை முட்டைகள் மீட்கப்பட்டு, அவை டாரோங்கா மிருகக்காட்சி சாலையில் வைத்து அடைகாக்கப்பட்டு வந்தன.
அந்த முட்டைகள் குஞ்சு பொரித்த நிலையில், ஆமைக் குஞ்சுகளை அதிகாரிகள் கடலில் விட்டனர். ஆமைக்குஞ்சுகள் மெல்ல ஊர்ந்து கடலை நோக்கிச் சென்றதை ஏராளாமானோர் கண்டுகளித்தனர்.