கொலம்பியாவில் வாயுவை உமிழும் நெவாடோ டெல் ரூயிஸ் எரிமலை, வெடித்துச்சிதற வாய்ப்புள்ளதாக விஞ்ஞானி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த எரிமலை தொடர்ச்சியாக வாயுவை வெளியேற்றி வருவதால், ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டு, உள்ளூர் மக்கள் விழிப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த எரிமலை வரும் நாட்களிலோ அல்லது வரும் வாரங்களிலோ வெடிப்பதற்கு வாய்ப்புள்ளதாகவும் எரிமலையினுள் இருக்கும் தீக்குழம்பு குளிர்ந்தால் வெடிக்காமல் இருக்கவும் வாய்ப்புள்ளதாகவும் கொலம்பிய புவியியல் ஆய்வு மைய விஞ்ஞானி கூறியுள்ளார்.