ரஷ்யாவின் மிகவும் செயல்பாட்டில் இருந்த Shiveluch எரிமலை வெடித்துள்ளதால், 20 கிலோமீட்டர் தூரம் வரை வானத்தில் சாம்பலை வெளியேற்றியது.
எரிமலை வெடித்ததால் பாறைகளும் உருண்டு விழுந்தன. கடுமையான கரும்புகையும் தீப்பிழம்பும் சூழ்ந்த எரிமலையின் படங்களை பலர் தங்கள் சமூக ஊடகப் பக்கங்களின் பகிர்ந்து வருகின்றனர்.
ரஷ்யாவின் தூரத்து கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள Shiveluch எரிமலை வெடித்ததால் அதன் தீப்பிழம்புகளை அதிகாரிகள் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.
அருகில் இருந்த கிராமங்களின் குடியிருப்புகளில் வசிப்பவர்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும் முகக்கவசத்தை அணியும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.