ரயில்வே வேலைக்கு நிலம் லஞ்சமாக பெற்றது தொடர்பான வழக்கில், பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் 9 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
மத்தியில் காங்கிரஸ் கூட்டணி அரசு 2004 முதல் 2009ம் ஆண்டு வரை ஆட்சியில் இருந்தபோது ரயில்வே அமைச்சராக இருந்த ராஷ்ட்ரீய ஜனதா தளம் நிறுவனர் லாலு பிரசாத், ரயில்வேயில் வேலை அளிப்பதற்கு லஞ்சமாக நிலத்தை தனது குடும்பம் தொடர்புடைய நிறுவனங்களால் பெறப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து விசாCBIரித்து வருகின்றன. முன்னதாக கடந்த மாத இறுதியில் தேஜஸ்வி யாதவ் மற்றும் அவரது சகோதரி மிசாபாரதி ஆகிய இருவரும் அமலாக்கத்துறை அதிகாரிகளின் விசாரணைக்கு நேரில் ஆஜராகினர்.