ரோபோக்களுக்கு எதிராக விளையாடும்போது மனித மூளை மிக சுறுசுறுப்புடன் வேலை செய்கிறது என்று விஞ்ஞானிகள் ஆய்வு ஒன்றில் கண்டறிந்துள்ளனர்.
அமெரிக்காவின் புளோரிடா மாகாண பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்கள், டேபிள் டென்னிஸ் போட்டி ஒன்றை நடத்தினர். அதில், ரோபோக்களுக்கு எதிராக மனிதர்கள் விளையாடும் போது, அவர்களின் மூளையின் செயல்பாடுகளைக் கண்காணிக்க அவர்களின் தலையில் எலக்ட்ரோடு பொருத்தப்பட்ட தலைக்கவசங்களை ஆய்வாளர்கள் பொருத்தியிருந்தனர்.
டென்னிஸ் பந்து வீச்சு இயந்திரத்தை எதிர்கொள்ளும்போது, மனிதர்களின் மூளையில் உள்ள நியூரான்கள் மற்றும் நரம்பு செல்கள் சீராக இல்லாமல் அங்குமிங்கும் நகர்ந்துகொண்டே இருந்தது. இந்த ஆய்வில் மனித மூளை வழக்கத்திற்கு மாறாக சிறப்பாக செயல்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.