இந்தியாவைப் பற்றிய எதிர்மறையான மேற்கத்திய நாடுகளின் பிரச்சாரங்களுக்கு அமெரிக்கப் பயணம் மேற்கொண்டுள்ள நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மறுப்புத் தெரிவித்துள்ளார்.
கோவிட் பேரிடருக்குப் பிறகு இந்திய மக்கள் வியாபார இழப்புகளில் இருந்து உறுதியுடன் மீண்டதை அவர் சுட்டிக் காட்டினார். இந்தியாவைப் பற்றி களத்தை காணாமல் கற்பிதங்களைப் பரப்புவோரை நம்புவதை விட, என்ன நடக்கிறது என்று நேரில் வந்து பார்த்து புரிந்துக் கொள்ளும்படி மேற்கத்திய நாடுகளை அவர் வலியுறுத்தினார்.
உலக வர்த்தக அமைப்பு மேலும் வளர்ச்சிப் பணியில் ஈடுபட வேண்டும் என்றும், அனைத்து நாடுகளின் கோரிக்கையையும் செவிகொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்திய நிர்மலா சீதாராமன், எதிர்மறைக் கருத்துகளை மட்டும் கேட்கக்கூடாது என்று வலியுறுத்தினார்.