கர்நாடக சட்டமன்றத் தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில் மிகவும் குறைந்த வாக்குவித்தியாசத்தில் வெற்றி தோல்விகள் நிர்ணயிக்கப்படும் சூழல் உருவாகி வருகிறது.
சில குறிப்பிட்ட தொகுதிகளில் சிறிய கட்சிகளின் செல்வாக்கு காரணமாக போட்டி பலமாகி வருகிறது. கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பாஜக, காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளிடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது.
தேர்தல் ஆணைய ஆவணங்களின் படி மிகக்குறுகிய வாக்கு வித்தியாசத்தில் வேட்பாளர்கள் வெற்றி பெறுவதாக தெரிய வந்துள்ளது.25 சதவீதத்திற்கும் அதிகமான இடங்கள் கடுமையான போட்டியைக் கண்டன.
கடந்த முப்பதாண்டுகளில் நடந்த அனைத்து சட்டசபை தேர்தல்களிலும் 5 சதவீத தொகுதிகள் மட்டுமே அதிக வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளன.