உத்தரப்பிரதேசத்தில் திருமண நிகழ்ச்சியில் மணமகனுடன் அமர்ந்திருந்த மணமகள் ரிவால்வாரால் வானத்தை நோக்கி 4 முறை சுடும் வீடியோ பதிவு வெளியானது.
சல்மார் கிராமத்தில், மாலைமாற்றும் நிகழ்ச்சியில் பங்கேற்ற, பெண்ணின் உறவினர் ஒருவர் துப்பாக்கியை வழங்கவும் மணமகள் 5 வினாடிக்குள் 4 ரவுண்ட் சுட்டுள்ளார்.
வடமாநிலங்களில் கொண்டாட்டங்களின் போது துப்பாக்கியால் சுடுவது சாதாரண நிகழ்வாக இருந்த போதிலும், 2019ம் ஆண்டு இயற்றப்பட்ட ஆயுதங்கள் தடைச் சட்டம் மூலமாக இந்த கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தற்போது, வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் 2 ஆண்டு சிறை அல்லது 1 லட்சம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.