அர்ஜெண்டினா ஏற்கனவே 100 விழுக்காடு பணவீக்கத்தால் தத்தளித்து வரும் நிலையில் , நூறு ஆண்டுகளில் இல்லாத வறட்சி, அந்நாட்டின் விவசாய ஏற்றுமதியை ஆட்டம் காண வைத்து வருகிறது.
வளமான இயற்கை வளங்கள், அதிக கல்வியறிவு பெற்ற மக்கள், ஏற்றுமதி சார்ந்த விவசாயத் துறை என லத்தீன் அமெரிக்காவின் 3வது பெரிய பொருளாதார நாடாக அர்ஜெண்டினா விளங்கி வந்தது.
இந்த நிலையில் கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவு பணவீக்கமும் 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடும் வறட்சியும் அந்நாட்டை சுமார் 44 பில்லியன் டாலர் கடனாளி நாடாக மாற்றியுள்ளது.
கடந்த 3 ஆண்டுகளில் ஆண்டு சராசரி மழைப்பொழிவில் பாதியை மட்டுமே பெற்றதால் அர்ஜெண்டினாவின் பிரதான விவசாயமான கோதுமை, மக்காச்சோளம், சோயா பீன்ஸ் சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.