2013ஆம் ஆண்டில் ஆட்டோ மீட்டர் கட்டணம் சீரமைப்பு நடந்த நிலையில், தற்போதும் அதே கட்டணத்திற்கு எப்படி ஆட்டோ ஓட்ட முடியும்? என கேள்வி எழுப்பிய சீமான், சொந்த வாகனம் இருந்தாலும் உபர், ஓலா நிறுவனங்களின் கீழ் வேலை செய்யும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வலியுறுத்தியும், பைக் டாக்சியை தடைசெய்யக்கோரியும் சீமான் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பின்னர் பேட்டியளித்த அவர், ஜொமேட்டோ, ஸ்விக்கி போன்ற உணவு விநியோக நிறுவனங்களை அரசே நடத்தலாம் என கூறினார்.