போரில் ரஷ்யாவால் சட்டவிரோதமாக நாடுகடத்தப்பட்ட உக்ரைன் குழந்தைகள் 31 பேர் பல மாதங்களுக்குப் பிறகு நாடு திரும்பியுள்ளர்.
நேற்று அவர்கள் நாடு திரும்பியதாக சேவ் உக்ரைன் தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. இவர்கள் கெர்சோன் மற்றும் கார்கீவ் பகுதிகளில் இருந்து கடத்தப்பட்டதாகவும், 5 மாதங்களில் 5 முறை அவர்களது இருப்பிடம் மாற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
உக்ரைனின் கூற்றுப்படி 19 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் ரஷ்யாவுக்கு நாடு கடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
உக்ரைன் குழந்தைகள் சட்டவிரோதமாக நாடு கடத்தப்பட்டதற்காக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கடந்த மாதம் ரஷ்ய அதிபர் புடினுக்கு கைது வாரண்ட் பிறப்பிந்திருந்தது.