இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த நாளான ஈஸ்டர் திருநாளை முன்னிட்டு வாடிகன் தேவாலயத்தில் போப் பிரான்சிஸ் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டார்.
முன்னதாக வாடிகனின் புனித பீட்டர் ஆலயத்தில் நடைபெற்ற பிரார்த்தனைக்கு போப் பிரான்சிஸ் அழைத்து வரப்பட்டார். இதையடுத்து அங்கு நடைபெற்ற வழிபாட்டுக்கு பிரான்சிஸ் தலைமை வகித்தார்.
இந்த நிகழ்வில் கத்தோலிக்க மதத்தை தழுவிய 8 வயது சிறுவன் ஒருவனுக்கு ஞானஸ்னானம் செய்தார். பின்னர் உரையாற்றிய அவர், உலகில் அனைத்து போர்களையும் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்றும் உக்ரைன் மக்களை தியாகிகள் என்றும் குறிப்பிட்டார்.