மின்னணு வாக்குப்பதிவுகளில் முறைகேடு செய்வதற்கான சாத்தியம் இல்லை என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் அஜித் பவார் தெரிவித்துள்ளார்.மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது முழு நம்பிக்கை இருப்பதாகவும் அவர் கூறினார்.
புனேயில் செய்தியாளர்களிடம் பேசிய அஜித் பவார், தேர்தலில் தோல்வியுற்ற அரசியல் கட்சிகள் இயந்திரங்கள் மீது பழி சுமத்துவதை விட்டு மக்கள் தீர்ப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறினார்.
மின்னணு இயந்திரங்களில் குளறுபடிகள் இருந்தால் தமிழ்நாடு ஆந்திரா தெலுங்கானா மேற்குவங்கம் பஞ்சாப் போன்ற மாநிலங்களில் பாஜகவை எதிர்க்கும் கட்சிகள் வெற்றி பெற்றிருக்க முடியுமா என்றும் அஜித் பவார் கேள்வி எழுப்பினார்.