அதானி விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை தேவையில்லை என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டி ஒன்றில்,அதானி குழுமத்தை அமெரிக்காவின் ஹின்டன்பர்க் ஆய்வு அமைப்பு திட்டமிட்டு குறிவைப்பதாக குற்றம் சாட்டினார்.
அதே நேரத்தில் அதானி குழுமம் தவறு செய்திருந்தால் விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் சரத்பவார் வலியுறுத்தினார்.
இதற்கு பதிலளித்த காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், அதானி விவகாரத்தில் 19 கட்சிகள் ஒன்றுபட்டு இருப்பதாகத் தெரிவித்தார். ஜனநாயகத்தின் மீதான பாஜகவின் தாக்குதல்களில் இருந்து நாட்டை பாதுகாக்க எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.