தீவிரவாத இயக்கங்கள் மீது நடவடிக்கை எடுக்கப் போவதாக பாகிஸ்தான் ராணுவம் அறிவித்துள்ளது.
பிரதமர் செபாஷ் செரீப் தலைமையில் நடைபெற்ற தேசிய பாதுகாப்புக் குழுக்கூட்டத்தில், பிப்ரவரி மாதம் கராச்சி காவல்நிலையத்தில் நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதல் குறித்து விவாதிக்கப்பட்டது.
நாடு முழுவதும் உள்ள தீவிரவாத இயக்கங்களை ஒடுக்க அரசும் ராணுவமும் உறுதியுடன் நடவடிக்கை எடுக்க இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
அரசு நிர்வாகம், அரசியல் சமூகப் பொருளாதார தளங்களில் இருந்து தீவிரவாதத்தை முற்றிலும் ஒழித்துக் கட்டப்போவதாக பாகிஸ்தான் அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.