காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பின் தளங்களை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பான வீடியோ காட்சிகளை இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ளது.
ஹமாஸ் அமைப்பின் ஆயுத தயாரிப்பு தளங்கள் மற்றும் சுரங்கப்பாதைகள் மீது இன்று இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியது.
லெபனானில் இருந்து ராக்கெட் தாக்குதல்கள் நடத்தப்பட்டதற்கு பதிலடியாக இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
லெபனானில் இருந்து 34 ராக்கெட்டுகள் ஏவப்பட்டதாகவும், அதில் 25 ராக்கெட்டுகள் வான் பாதுகாப்பு அமைப்புகளால் இடைமறித்து அழிக்கப்பட்டதாகவும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.