இத்தாலியை சேர்ந்த நிதி ஆலோசகர் ஒருவர் டேட்டிங் சமூக வலைதளமான டிண்டர் செயலியில், 14 கோடி ரூபாய் அளவுக்கு பறிகொடுத்த சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
ஹாங்காங்கில் வசித்து வந்த 55 வயதான நபர் ஒருவர், முதலீட்டு தரகராக அறிமுகமான சிங்கப்பூரைச் சேர்ந்த பெண்ணுடன் வாட்ஸ்அப் வாயிலாக உரையாட லை ஆரம்பித்துள்ளார்.
போலியான ஒரு ட்ரேடிங் கணக்கை ஏற்படுத்தி, அதில் க்ரிப்டோ கரன்ஸியாக முதலீடு செய்தால், அதிக லாபம் ஈட்டலாம் என அப்பெண் கூறியதை நம்பி, வெவ்வேறு வங்கி கணக்குகளுக்கு 14.2 மில்லியன் ஹாங்காங் டாலரை அந்நபர் முதலீடு செய்திருக்கிறார்.
லாபம் கிடைக்காத தை அடுத்து சந்தேகம் அடைந்த நிதி ஆலோசகர், போலீசில் புகாரளித்தார்.