போருக்கு மத்தியில் உக்ரைனின் நெருங்கிய நட்பு நாடான போலந்துக்கு சென்ற உக்ரைன் அதிபர் ஜெலெனஸ்கி, அந்நாட்டு அதிபர் ஆண்ட்ரெஜ் டுடா சந்தித்து பேசினார்.
பின்னர் வார்சாவில் உள்ள ராயல் கோட்டையில் திரண்டிருந்த மக்களுக்கு மத்தியில் உரையாற்றிய ஜெலென்ஸ்கி, உக்ரைனுக்கு போர் டாங்கிகளை வழங்க மேற்கத்திய நாடுகளிடம் ஆதரவை பெற போலந்து உதவியதை போன்று, போர் விமானங்களை வழங்கவும் உதவும் என தான் நம்புவதாக தெரிவித்தார்.
மேலும், உக்ரைனும் போலந்தும் நெருக்கமாக இணைந்து செயல்படும் போது ரஷ்யாவால் ஐரோப்பாவை தோற்கடிக்க முடியாது என்றும் அவர் கூறினார்.
முன்னதாக பேசிய போலந்து அதிபர், ரஷ்யா உக்ரைனில் போர்க்குற்றம் இழைத்துள்ளதாகவும் இது தண்டிக்கப்பட வேண்டுமென்றும் தெரிவித்தார்.