ரஷ்யாவின் கடும் எதிர்ப்பை மீறி நேட்டோ கூட்டமைப்பில் இணைந்த பின்லாந்து, ரஷ்ய எல்லையில் 200 கிலோமீட்டர் தொலைவிற்கு வேலி அமைக்க உள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்திலேயே, ரஷ்யாவுடன் 1,340 கிலோமீட்டர் தொலைவிற்கு, மீக நீண்ட நில எல்லையை பின்லாந்து பகிர்ந்துவருகிறது.
ரஷ்யாவிலிருந்து சட்டவிரோதமாக வருபவர்களை கண்காணிப்பதற்காக மின்சார சென்சார்கள் பொருத்தப்பட்டு, 10 அடி உயரத்திற்கு அமைக்கப்படும் இந்த வேலியை 4 ஆண்டுகளுக்குள் கட்டிமுடிக்க பின்லாந்து அரசு திட்டமிட்டுள்ளது.