அமெரிக்க டாலருக்கு நிகரான பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு மிகப்பெரிய அளவில் சரிவை சந்தித்துள்ளது.
ஒரு டாலருக்கு நிகராக பாகிஸ்தான் 287 ரூபாய் 29 காசுகளை வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம் 2ம் தேதி 285 ரூபாய் 9 பைசாவாக இருந்த நிலையில், தற்போது உச்சபட்ச சரிவு அளவை பாகிஸ்தான் ரூபாய் எட்டியுள்ளது.
பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள பாகிஸ்தான், தனது பொருளாதாரத்தை மீட்க சவுதிஅரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகள் மற்றும் சர்வதேச நாணய நிதியத்திடம் கோரியுள்ள கடன் தொகையை எதிர்பார்த்து காத்திருக்கிறது.