பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில், கடலில் தவறி விழுந்து ராட்சத அலைகளில் சிக்கி உயிருக்கு போராடிய நபரை தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டனர்.
புயலின் காரணமாக ரியோ டி ஜெனிரோ கடற்பகுதி சீற்றத்துடன் காணப்படுவதோடு, ராட்சத அலைகள் எழுகின்றன.
2 புள்ளி 5 முதல் 3 மீட்டர் அளவுக்கு ராட்சத அலைகள் எழக்கூடும் என்பதால், நீச்சல் வீரர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக, பிரேசில் கடற்படையினர் கடற்கரையில் சிவப்பு நிற கொடிகளை வைத்துள்ளனர்.
எனினும் சிலர், ஆபத்தான முறையில் கடற்கரையில் விளையாடுவதோடு, ராட்சத அலைகளைக் காண கடற்பகுதிக்கு வருகின்றனர்.