பர்கர் உணவு சங்கிலி நிறுவனமான மெக்டொனால்ட்ஸ் கார்ப் அதன் அமெரிக்க அலுவலகங்களை தற்காலிகமாக மூடுவதாக அறிவித்துள்ளது.
நிறுவனத்தின் இந்த அறிவிப்பு மறுசீரமைப்பு நடவடிக்கை மற்றும் ஊழியர்களின் பணிநீக்க நடவடிக்கைகளுக்காக மேற்கொள்ளப்படுவதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
எனினும், எத்தனை ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்ற விபரம் தெரிவிக்கப்படவில்லை.