2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 9 தொகுதிகளில் பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளதாகவும், அத்தொகுதிகளில் கவனம் செலுத்தி வருவதாகவும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறினார்.
சென்னை சாலிகிராமத்தில் நடைபெற்ற பாஜகவின் சக்தி கேந்திரா பொறுப்பாளர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற எல்.முருகன் செய்தியாளர்கள் சந்திப்பில் இக்கருத்தினை தெரிவித்தார்.