நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நாளை சூரத் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மோடி பெயர் குறித்ததான அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றம் ராகுல்காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதித்து கடந்த மாதம் 23-ம் தேதி தீர்ப்பளித்தது.
அத்துடன் மேல்முறையீடு செய்யும் வகையில் ராகுல்காந்திக்கு 30 நாட்கள் ஜாமீனும் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து ராகுல்காந்தி நாளை சூரத் செஷன்ஸ் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.