உக்ரைனில் நடைபெற்ற போர்க்காலக் குற்றங்களுக்கு புதினை பொறுப்பேற்க வைப்போம் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
உக்ரைன் பொதுமக்களிடம் காணொலி வாயிலாக உரை நிகழ்த்திய ஜெலன்ஸ்கி, ரஷ்ய அதிபர் புதின் மீது சரமாரியான புகார்களைக் கூறினார். ரஷ்ய கொலையாளிகள் அனைவருக்கும் உரிய தண்டனை விதிக்கப்படும் என்று அப்போது ஜெலன்ஸ்கி ஆவேசமாகக் கூறினார்.
ரஷ்யாவை போர்க்குற்றவாளியாக நிறுத்த சர்வதேச நீதிமன்றத்தில் வலியுறுத்தி வருவதாகக் கூறிய ஜெலன்ஸ்கி, போர்க்காலக் குற்றங்களை விசாரிக்க சிறப்பு நீதிமன்றத்தை அமைக்க முயற்சி எடுத்திருப்பதாக தெரிவித்தார். ரஷ்யா கைப்பற்றிய நிலப்பகுதிகள் முழுமையாக விடுவிக்கப்படும் என்றும் ஜெலன்ஸ்கி தெரிவித்தார்.