சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திற்குள் முன்பதிவு செய்த பயணிகளை ஏற்றுவதற்காக வரும் ஓலா மற்றும் ராபிடோ டூவீலர் ஓட்டுநர்களை, ஆட்டோ ஓட்டுநர்கள் தாக்குவதாக காவல் ஆணையரகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
பேருந்து நிலைய வாசலில் வாடிக்கையாளருக்காக காத்திருந்த ராபிடோ ஓட்டுநரான சஞ்சய்யை, அங்கிருந்த ஆட்டோ ஓட்டுநர் கார்த்தி என்பவர், நீங்கள் இங்கு வரக்கூடாதென திட்டி, கற்களால் தாக்கியதாக கூறப்படுகிறது.
தாக்குதல் வீடியோ பதிவுடன் ராபிடோ ஓட்டுநர்கள் புகார் அளித்துள்ளதோடு, கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 4 முறை தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாகவும், தங்களது டூவிலர், புளு டூத், ஹெல்மெட் உள்ளிட்டவற்றையும் ஆட்டோ ஓட்டுநர்கள் சேதப்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளனர்.