2022-23-ம் நிதியாண்டில் இந்தியா 15 ஆயிரத்து 920 கோடி ரூபாய் மதிப்பிலான ராணுவ உபகரணங்களை ஏற்றுமதி செய்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.
இது முன்னெப்போதும் இல்லாத உயர்வு எனவும் ராஜ்நாத்சிங் கூறினார். பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் நாட்டின் பாதுகாப்பு தளவாடங்கள் ஏற்றுமதி தொடர்ந்து அதிவேகமாக வளரும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
2024-25 ம் நிதியாண்டுக்குள் ராணுவ ஏற்றுமதியை 35 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்த்த மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.