கொலம்பியாவில் உள்ள நெவாடோ டெல் ரூயிஸ் எரிமலை, வாயுவை வெளியேற்றி வருவதால், ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
டோலிமா மற்றும் கால்டாஸ் மாகாண எல்லையில் உள்ள இந்த எரிமலை கடந்த மார்ச் 24ம் தேதி முதல் வாயுவை வெளியேற்றி வருகிறது.
வரும் நாட்களில் எரிமலை வெடிப்பதற்கான வாய்ப்பு அதிகரித்திருப்பதாக கொலம்பிய புவியியல் ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த 1985ம் ஆண்டு இந்த எரிமலை வெடித்து மிகப்பெரிய இயற்கை பேரழிவு ஏற்பட்டதில், 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.