உக்ரைன் நாட்டின் கிராமப்பகுதிக்குள் நுழைந்த ரஷ்ய டேங்குகளை உக்ரைன் வீரர்கள் அடுத்தடுத்து சுட்டு வீழ்த்திய வீடியோ வெளியாகி உள்ளது.
டொனெட்ஸ்க் என்ற கிராமம் வழியாக ரஷ்யாவின் ஐந்து T72 ரக டேங்குகள் நுழைந்து சென்றன. இதனைக் கண்காணித்துக் கொண்டிருந்த உக்ரைன் வீரர்கள் தாங்கள் வைத்திருந்த ராக்கெட் லாஞ்சர்களின் உதவியுடன் ஒவ்வொரு டேங்காக சுட்டு வீழ்த்தினர்.
இதற்காக அவர்கள் அமெரிக்கா வழங்கிய ஜாவ்லின் ரக ராக்கெட் குண்டுகளைப் பயன்படுத்தியிருந்தனர்.