அமெரிக்காவில் ஆபாச நடிகை ஸ்டோர்மி டேனியல்ஸ்க்கு பணம் கொடுத்ததாக முன்னாள் அதிபர் ட்ரம்ப் மீது மன்ஹாட்டன் நடுவர் மன்றம் குற்றம் சாட்டியுள்ளது.
இதனால் அந்நாட்டின் வரலாற்றிலேயே இதுபோன்ற கிரிமினல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் முதல் முன்னாள் அதிபர் என்ற பெயரை ட்ரம்ப் பெற்றுள்ளார். இந்நிலையில் குற்றம் சாட்டப்பட்டாலும் குடியரசுக் கட்சியின் வேட்பாளருக்கான பிரச்சாரத்தைத் தொடரப் போவதாக ட்ரம்ப் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், இது அரசியல் ரீதியான துன்புறுத்தல் என்றும், வரலாற்றிலேயே மிக உயர்ந்த தேர்தல் தலையீடு என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். டிரம்ப் எதிர்கொள்ளும் சட்டப் பிரச்சனைகளில் ஒன்றான மன்ஹாட்டன் விசாரணையால், அவர் மீண்டும் அதிபராகும் முயற்சி பாதிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.