அரசியல்வாதிகள் மதத்தைப் பயன்படுத்துவதை நிறுத்தினால் வெறுப்புணர்வு பேச்சுக்கள் முடிவுக்கு வரும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
வெறுப்பைத் தூண்டும் பேச்சு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது கருத்துத் தெரிவித்த நீதிபதிகள், வெறுப்புணர்வு பேச்சுக்கள் ஒரு தீயவட்டம் என்று குறிப்பிட்ட நீதிபதிகள், இத்தகைய பேச்சுக்கள் விளிம்பு நிலையில் இருந்து வருவதாகவும், மக்கள்தான் தங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டனர்.
அரசியலை மதத்துடன் கலக்கும் போது பெரிய பிரச்சனை எழுகிறது என்று குறிப்பிட்ட நீதிபதிகள், மதத்துடன் அரசியலை கலப்பது ஆபத்தானது என்றும் தெரிவித்தனர்.