பாகிஸ்தான், இலங்கை என திவாலாகும் நிலையிலிருந்த நாடுகளுக்கு, 20 லட்சம் கோடி ரூபாய் வரை சீனா கடனுதவி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலக நாடுகள் உடனான வர்த்தக உறவை மேம்படுத்தவதாக கூறி, ”பெல்ட் அண்ட் ரோடு” (Belt and Road) என்ற திட்டத்தை 10 ஆண்டுகளுக்கு முன் அறிமுகப்படுத்திய சீனா, அதில் இணைந்துள்ள 150 நாடுகளை சாலை மார்க்கமாகவும், கடல் மார்க்கமாகவும் சீனா உடன் இணைக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது.
கடந்த 20 ஆண்டுகளில், அந்த நாடுகளுக்கு 20 லட்சம் கோடி ரூபாய் வரை சீனா கடனுதவி அளித்துள்ளது.
IMF போன்ற சர்வதேச வணிக அமைப்புகள் 2 சதவீதம் வட்டி விதிக்கும் நிலையில், சீனா 5 சதவீதம் வட்டி வசூலிப்பதாகவும், கடன் வாங்கும் நாடுகள் சீனாவிற்கு சாதகமாக நடந்துகொள்ளுமாறு ஏராளமான நிபந்தனைகள் விதிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.