ஆப்கானிஸ்தானின் வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு அருகே நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 6 பேர் உயிரிழந்ததோடு, ஒரு குழந்தை உட்பட பலர் படுகாயமடைந்தனர்.
தலைநகர் காபூலில் உள்ள வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் அருகிலுள்ள வர்த்தக மையத்திற்கு முன்பாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தாக்குதல் நடத்திய நபர், ஆப்கன் படைகளால் அடையாளம் காணப்பட்டதாக, அரசு செய்தித்தொடர்பாளர் அப்துல் நஃபி தெரிவித்துள்ளார். கடந்த 3 மாதங்களில் வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு அருகே இரண்டாவது முறையாக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.