அமெரிக்க தலைநகர் வாசிங்டனில் உள்ள தேசிய அருங்காட்சிய கட்டிடங்களுக்கு இடையே பல அடி நீளத்துக்கு கட்டப்பட்ட வயரில் பிரான்ஸை சேர்ந்த 73 வயதான சாகச கலைஞர் பிலிப் பெடிட் நடந்து சென்ற காட்சிகள் வெளியாகியுள்ளன.
நியூயார்க்கில் முன்பு இருந்த இரட்டை கோபுர கட்டிடங்களுக்கு இடையே கட்டப்பட்ட கயிறு மீது 50 ஆண்டுகளுக்கு முன்பு நடந்து பிலிப் பெடிட் சாதனை படைத்திருந்தார்.
இதேபோல் பிரான்சில் உள்ள Notre Dame Two towers கட்டிடங்கள், அமெரிக்காவில் உள்ள நயாகரா நீர்வீழ்ச்சி, ஆஸ்திரேலியாவின் சிட்னி ஹார்பர் பிரிட்ஜ் உள்ளிட்டவை மீது கட்டப்பட்ட கயிற்றில் நடந்தும் சாதனை படைத்திருந்தார்.