திபெத் நாட்டின் புத்தமத தலைமையின் 3வது பெரிய பதவியான லாமா பதவியில் அமெரிக்காவில் பிறந்த 8 வயது மங்கோலிய சிறுவன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இமாச்சலபிரதேசத்தில் உள்ள தர்மசாலாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில், திபெத்திய பவுத்தத்தின் 10வது கல்கா ஜெட்சன் தம்பா ரின்போச்சே என்ற லாமா பதவியில் சிறுவன் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலாய்லாமாவை சீனா அங்கீகரிக்காத நிலையில் இந்தியாவில் தஞ்சமடைந்திருக்கும் அவர் புதிய லாமாவை நியமனம் செய்துள்ளார்.
கடந்த 1995ம் ஆண்டில் 11ஆவது தலாய்லாமாவாக அறிவிக்கப்பட்டவரை, சீனா கடத்திச் சென்ற பிறகு அவர் குறித்த எந்த விபரமும் வெளியில் தெரியாத நிலையில், தற்போதைய லாமா பதவியேற்பு நிகழ்ச்சியும், சிறுவனின் விபரமும் ரகசியமாக வைக்கப்பட்டிருந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.