அருணாசல பிரதேசத்தில் நடைபெற்ற ஜி20 அமைப்பு தொடர்பான முக்கியக் கூட்டத்தை சீனா புறக்கணித்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
திபெத்தின் ஒரு அங்கமாக கூறி அருணாசல பிரதேசத்தை தங்களுக்கு சொந்தமான பகுதியாக சீனா உரிமை கொண்டாடி வருகிறது.
ஆனால் இதை இந்தியா ஏற்கவில்லை. ஜி20 அமைப்பின் தலைவராக இந்தியா பொறுப்பேற்றுள்ள நிலையில், நாட்டின் 50 முக்கிய நகரங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக இடாநகரில் முக்கிய கூட்டம் நேற்று நடைபெற்றுள்ளது.