பருவநிலை மாறுபாட்டினால் ஏர் டர்புலன்ஸ் எனப்படும் விமானங்கள் பறக்கும் போது நடுவானில் குலுங்குவது மேலும் மோசமாகும் என ஆய்வில் தெரியவந்துள்ளது.
பயணத்தின் போது திடீரென காற்றின் வேகத்தில் சிக்கி விமானம் குலுங்குவது அடிக்கடி நடக்கும் நிகழ்வாகும். இதில் சில பயணிகள் தூக்கி வீசப்பட்டு காயமடைந்துள்ளனர். இந்நிலையில் இங்கிலாந்தைச் சேர்ந்த ரீடிங் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில், ஏர் டர்புலன்ஸ் கடந்த 1979ம் ஆண்டினை விட தற்போது 15 விழுக்காடு அதிகமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் இந்த விகிதாச்சாரம் வரும் 2050 மற்றும் 2080ம் ஆண்டுகளுக்கு இடையே 3 மடங்கு அதிகரிக்கும் என்று தெரியவந்துள்ளது. இதனால் விமானப் பயணிகள் மற்றும் பணியாளர்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.