கொரனோவுக்கு பின்னர் பெரும்பாலானவர்களுக்கு நுரையீரல் தொற்று, நெஞ்சக பாதிப்பு அதிகரித்திருப்பதாக மருத்துவ நிபுணர்களுக்கான கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில், நடைபெற்ற சுவாசம் மண்டலம் தொடர்பான மருத்துவ நிபுணர்களுக்கான கருத்தரங்கில் பேசிய அப்பல்லோ மருத்துவமனை குழும துணைத் தலைவர் ப்ரீத்தா ரெட்டி, கொரோனோ தொற்று பரவலின் வேகம் உலகளவில் குறைந்திருந்தாலும் பெரும்பாலானோருக்கு நுரையீரல் மற்றும் நெஞ்சக பாதிப்பு கண்டறியப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
மேலும், கோவிட், இன்புளூயன்ஸா பாதிப்பிற்கு உள்ளானவர்களுக்கு மாரடைப்பு மற்றும் சர்க்கரை நோய் பாதிப்புகளும் பரவலாக கண்டறியப்படுவதாகவும் கருத்தரங்கில் மருத்துவர்கள் தெரிவித்தனர்.