பிரான்ஸில், பண்ணைகளின் நீர்பாசனத்திற்காக புதிய அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது.
சைன்ட் சொலின் பகுதியில் தடையை மீறி பேரணி செல்ல முயன்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்த முயன்றனர். அப்போது, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பட்டாசுகளை வீசியெறிந்தும், தடுப்பு வேலிகளையும் தாண்டி சென்றனர்.
பதிலுக்கு கண்ணீர் புகை குண்டு வீசி போலீசார் அவர்களை விரட்டியடிக்க முயன்றனர். அப்போது, இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால், அந்த இடம் போர்க்களமாகக் காட்சி அளித்தது. இதில், காவல்துறை வாகனம் ஒன்று தீயில் கருகி சேதமடைந்தது.