அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணத்தை தாக்கிய சக்தி வாய்ந்த புயல் பாதிப்புகளில் சிக்கி 21 பேர் உயிரிழந்துள்ளனர்.
மிசிசிப்பி, அலபாமா, டென்னசி உள்ளிட்ட தெற்கு மாகாணங்கள் புயலால் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன.
புயல் கரையைக் கடந்த போது சுமார் 50 மைல் வேகத்தில் காற்று வீசியதில், பல வீடுகளின் மேற்கூரைகள் சேதமடைந்ததோடு, மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன.
இதன் காரணமாக, சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளன. புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.