தீவிரவாதிகள் பிடியில் சிக்கிய விமானத்தை மீட்பது தொடர்பாக தேசிய பாதுகாப்பு படையினர் மற்றும் கடத்தல் எதிர்ப்புப் படையினர் ஜம்முகாஷ்மீரில் கூட்டுப்பயிற்சி மேற்கொண்டனர்.
ஜம்முவில் தரையிறங்கிய ஏர் இந்தியா விமானத்தை தீவிரவாதிகள் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வருவது போன்றும், அந்த விமானத்தை மீட்க காஷ்மீர் போலீசார், இந்திய விமானப்படை உள்பட பல்வேறு துறைகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுவது குறித்தும் பயிற்சி மேற்கொள்ளப்பட்டது.
கடத்தல்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவது, அனைத்து துறையினருடன் இணைந்து தேசிய பாதுகாப்பு படையினர் தாக்குதல் நடத்தி விமானத்தை மீட்பது குறித்தும் பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.