அமெரிக்க பயணத்திற்கு முன்னதாக தைவான் அதிபர் சாய் இங் வென் தங்கள் நாட்டு படைகளை ஆய்வு செய்தார்.
இன்று ராணுவப் பொறியாளர்களை சந்தித்து அவர்களின் பயிற்சியை ஆய்வு செய்த சாய் இங் வென், ஜனநாயகத்தைப் பாதுகாப்பதே ஆயுதப்படைகளின் பெரியப் பணி என தெரிவித்தார்.
சீனா-தைவான் இடையே கடந்த சில மாதங்களாக பதட்டங்கள் அதிகரித்துள்ள நிலையில், தைவான் அதிபர் சாய் இங் வென் அடுத்தவாரம் அரசு முறை பயணமாக அமெரிக்கா செல்கிறார்.