நடிகர் அஜித் குமாரின் தந்தை சுப்பிரமணியம் மறைவை அடுத்து, அஜித்தை நேரில் சந்தித்து நடிகர் விஜய் ஆறுதல் தெரிவித்தார்.
உடல் நலக்குறைவால் அஜித்தின் தந்தை இன்று அதிகாலை காலமான நிலையில், அவரது உடல் பெசன்ட் நகர் மயானத்தில் பிற்பகலில் தகனம் செய்யப்பட்டது. இந்நிலையில், சென்னை அடுத்த ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள வீட்டில், அஜித்தை சந்தித்த விஜய் நேரில் இரங்கல் கூறினார்.