பொருளாதார நெருக்கடியில் உள்ள இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் 3 பில்லியன் அமெரிக்க டாலர் கடன் வழங்கும் திட்டத்துக்கு ஒப்புதல் அளித்து இருப்பதற்கு அந்தநாட்டு அரசு நன்றி தெரிவித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியம் உதவி வழங்கி இருப்பதை நாடாளுமன்றத்தில் தெரிவித்த அதிபர் ரனில் விக்ரமசிங்கே, இந்த உதவி இலங்கையின் நிர்வாக மேம்பாட்டுக்கு வழிவகுக்கும் என்றார்.
சர்வதேச நாணய நிதியத்தின் இந்த நடவடிக்கை இலங்கையின் வரலாற்றில் மைல்கல் என்றும் பாராட்டப்பட்டது. இதனிடையே இலங்கையின் பெரிய பொருளாதார சிக்கல் மற்றும் கடன் நிலைதன்மையை மீட்டெடுப்பது, ஏழைகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் பொருளாதார தாக்கத்தை குறைப்பதே இந்த திட்டத்தின் நோக்கம் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.