தாய்லாந்தில், 3 பேரை சுட்டு கொன்றுவிட்டு வீட்டில் பதுங்கிய நபரை 14 மணி நேர போராட்டத்திற்கு பின் கமாண்டோ படையினர் சுட்டு கொன்றனர்.
போதை பொருள் கடத்தல் வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜாராகுமாறு அனுவாட் என்ற 29 வயது இளைஞனுக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.
இந்நிலையில், தன்னோடு வாக்குவாதத்தில் ஈடுபட்ட பக்கத்து வீட்டு நபர்கள் 2 பேரையும், ஒரு டெலிவரி பாயையும் துப்பாக்கியால் சுட்டு கொன்றுவிட்டு, வீட்டின் 2ஆம் தளத்தில் அவன் பதுங்கிகொண்டான்.
போலீசார் அவனது தாயாரை வரவழைத்து, மெகாபோன் மூலம் பேசவைத்த போதும் அனுவாட் வெளியே வராததால், கவச வாகனம் மூலம் கதவை உடைத்து வீட்டிற்குள் புகுந்த கமாண்டோ படையினர், தங்களை நோக்கி கண்மூடித்தனமாக சுட்ட அனுவாட்டை சுட்டு கொன்றனர்.